ஒரு தொகுதி காணி விடுவிப்பு!


வடக்கில் படையினர் வசமுள்ள ஒரு தொகுதி காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ். மாவட்டத்தில் தெல்லிப்பளை ஜே 250 கிராம சேவகர் பிரிவில் 19.63 ஏக்கர் தனியார் காணியும், பலாலி தெற்கு, தெல்லிப்பளை ஜே 252 கிராம சேவகர் பிரிவில் 23.50 ஏக்கர் தனியார் காணியும் இன்று வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள 1208.27 ஏக்கர் தனியார், மற்றும் அரச காணிகள் இன்று விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வழமையாக கைப்பற்றப்பட்ட இடங்களில் மக்களது வீடுகளை இடித்து அழித்துவிடுவதே படையினரது வழமையாகும்.

எனினும் படை அதிகாரிகள் தங்கியிருந்ததாக நம்;பப்படும் வீடுகள் மற்றும் பௌத்த விகாரை என்பவையும் இன்று விடுவிக்கப்பட்டவற்றில் உள்ளடங்கியிருந்தது.

No comments