பௌத்த பீடங்கள் அனுமதித்தாலே புதிய அரசியல் யாப்பு

புதிய அரசிலயமைப்புக்கான சட்டமூலம் இன்னும் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் பௌத்த பீடங்களின் அனுமதியினைப் பெற்றபின்பே அவை சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

குளியாபிட்டி மேற்கு பிரதேசத்துக்கான நில செவன அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (18) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இதுவரை தயாரிக்கப்படாத அரசியலமைப்பு தொடர்பாக இல்லாத ஒன்றை கூறியும் நாட்டை காட்டிக்கொடுப்பதாக கூறியும் ஒரு சிலர் அரசாங்கத்தை தாக்கி பேசுகின்றனர். எனினும் புதிய அரசிலயமைப்புக்கான வரைபு கூட இதுவரை முன்வைக்கப்படவில்லை.

நிபுணர்களினதும் கட்சிகளின் நிலைப்பாடுகளுமே இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு முன்னர் பௌத்த மகா பீடங்களின் அனுமதியை பெற்றுக்கொள்வோம் என்றார்.

No comments