தமிழர் விடுதலைக்கூட்டணியின் அலுவலகம் மீது தாக்குதல்


தமிழர் விடுதலைக்கூட்டணியின் அலுவலகம் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகமே நேற்று அதிகாலை இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

காரியாலயத்தின் முன்பக்க கதவை உடைத்த இனந்தெரியாத நபர்கள் காரியாலயத்திற்குள் சென்று பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

No comments