பிந்திக்கிடைத்த ராகுலின் வாழ்த்து!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது தாமதமான மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்; அரசியல் ரீதியில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகப் பாராளுமன்றத்தில் நம்பிக்கையை வெற்றிகொள்வதற்காக இடம்பெற்ற வாக்களிப்பில் பெறப்பட்ட வெற்றி மற்றும் பாராளுமன்றத்தின் இறைமையைப் பாதுகாத்து உயர் நீதிமன்றம் வழங்கிய வழக்குத் தீர்ப்புக் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தொடர்ச்சியாக ஸ்திரமான அரசியல் தன்மை இடம்பெற வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்றும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

No comments