மீண்டும் அனுராதபுரம் சிறையில் போராட்டம்!


சிவபிரகாசம் சிவசீலன்(32) எனும்  தமிழ் அரசியல் கைதி தனது விடுதலையினை வலியுறுத்தி சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை முதல் அனுராதபுரம் சிறையிலிருந்து அவர் தனது உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அவர் குதித்துள்ளார்.

இலங்கை இராணுவம் 19 மே 2009 அன்று வவுனியாவில் உள்ள ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து அவரை கைதுசெய்தது. இறுதி யுத்த இனப்படுகொலை நடக்கும் போது அவரது தாயையும் ஒரு சகோதரரையும் இராணுவ எறிகணை வீச்சில் அவர் இழந்திருந்தார். அவரது தந்தை, சிவப்பிரகாசம், அவரது மகனின் விடுதலைக்காக அயராது பாடுபட்டுவந்திருந்த நிலையில்  டிசெம்பர் 16 ம் திகதி கிளிநொச்சி வட்டக்கச்சியில் காலமானார்.

சிவப்பிரகாசம் குடும்பத்தில் தற்போது தனித்து உயிர்பிழைத்தவராக இப்போது சிறையிலுள்ள சிவபிரகாசம் சிவசீலன் மட்டுமே எஞ்சியுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக சிவபிரகாசம் சிவசீலனது இழுத்தடித்துவருகின்றது.

கொழும்பில் உள்ள ஐ.தே.க. உடன் குருட்டுத்தனமாக ஒத்துழைத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் போர்க்குற்றவாளிகளை விடுதலை செய்வதில் முழுமையாக தவறிவிட்டது.
இந்நிலையிலேயே சிவபிரகாசம் சிவசீலன் தனது போராட்டத்தை கடந்த சனிக்கிழமை முதல் சிறையில் ஆரம்பித்துள்ளார்.

No comments