மைத்திரியா?கோத்தாவா? யார் ஜனாதிபதி!

அதிபர் தேர்தலுக்குத் தயாராகுமாறு, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியுரிமை பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதிபர்  மைத்திரிபால சிறிசேன அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவின் இந்தக் கருத்தை சிறிலங்கா அதிபர் செயலக மூத்த அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதிபர் சிறிசேன அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, மகிந்த ராஜபக்ச ஆதரவு தரவதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு தர மறுத்தால், அந்தக் கட்சியுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் மகிந்த சமரசிங்கவும் கூறியுள்ளார்.

No comments