வடக்கில் 200 பொலிஸாரின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததுடன், மேன்முறையீடு செய்துள்ள அவர்கள், வடக்கில் பணியாற்ற தாம் விரும்புவதாக கூறியுள்ளனர்.

அதன்படி தற்போது 230 உத்தியோகத்தர்களின் இடமாற்றம் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுப்படி இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்காண்டோ கூறினார்.

முதலில் 135 பேரும், இரண்டாவது தடவையாக 40 பேரும் இடமாற்றத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர்.

இதுதவிர மேலும் 56 உத்தியோகத்தர்கள் வடக்கில் பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்காண்டோ கூறினார்.

No comments