பொங்கல் நிகழ்வைத் தடுத்து நிறுத்திய சிங்களக் கும்பல்! நாயாற்றில் சம்பவம்


முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வு தெற்கிலிருந்து வருகை தந்த சிங்கள கும்பலால் தடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை பிரதேச தமிழ் மக்கள் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்ட வேளை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினை ஆக்கிரமித்து பௌத்த விகாரையினை அமைத்துள்ள பௌத்த மதகுரு ஒருவர் தலையில் கொழும்பில் இருந்து வருகை தந்த 40ற்கு மேற்பட்ட பௌத்த மதகுரு மாரும் அதனை தடுக்க முற்;பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விகாரைக்கு அருகில் உள்ள படையினர் மற்றம் படை அதிகாரிகள் குறித்த இடத்தில் குவிந்திருந்தனர்.

ஆலயம் பௌத்த ஆலயம் என்றும் அது பௌத்த மதத்திற்குரிய இடம் என்றும் அதில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளமுடியாது என்றும் தெற்கில் இருந்து வருகைதந்த பௌத்த பிக்குகள் வாதிட்டிருந்தனர்.

நீண்ட இழுபறிகளின் மத்தியில் காவல்துறை பாதுகாப்புடன் பொங்கல் நிகழ்வு நடைபெற்றதுடன்  ஆலயத்தினை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது.

தெற்கில் இருந்து வந்த இலங்கையினை பாதுகாப்போம் என்ற ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்படும் ஒரு பௌத்த அமைப்பினை சேர்ந்த 40ற்கும் மேற்பட்டவர்களே நீராவியடிப்பிள்ளையார் ஆலயப்பகுதியில் குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments