மனோகணேசனுக்கு 65 கோடி


ஒக்டோபர் 26 ஏற்படுத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பையடுத்து மகிந்த ராஜபக்சவை பிரதமராகக் கொண்ட அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, கோத்தாபய ராஜபக்சவால் தன்னுடன் பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சண்குகவரதனின் நெருங்கிய சகா ஊடாக இந்த பேரம் தன்னிடம் தொலைபேசியில் பேசப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், அந்த தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவையும் வெளியிட்டுள்ளார்.

“மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தாபய ராஜபக்ச உங்களை சந்திக்க விரும்புகிறார். மகிந்த ராஜபக்சவை பிரதமராகக் கொண்ட புதிய அரசில் தங்களுக்கு அமைச்சுப் பதவி ஒன்றை வழங்குவதுடன் 65 கோடி ரூபா பணத் தொகையையும் வழங்க கோத்தாபய ராஜபக்ச தனது சகா ஊடாக தங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்” என்று அந்த உரையாடலில் பேசுபவர் மனோ கணேசனிடம் கூறுகின்றார்.

இந்த உரையாடல் ஒக்டோபர் 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும் அதன் முதலாவது பகுதியை தற்போது வெளியிடுவதாகவும் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.

No comments