நல்லாட்சியின் ஊழல்கள் - விசாரணைக் குழு நியமிப்பு

2015 ஜனவரி 14ஆம் திகதியிலிருந்து 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபயரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவில் மேலும் 4 உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன ஓய்வு பெற்ற கணக்காய்வாளர் நாயகம் பீ.ஏ. பேமலதிலக்க ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் லலித் ஆர் டீ சில்வா ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜய அமரசிங்க ஆகியோர் இந்த ஆணைக்குழுவின்

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளராலேயே இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று விடுக்கப்பட்டது.

No comments