புனரமைக்கப்பட்ட மூளாய் வைத்தியசாலை திறப்பு


யாழ். குடாநாட்டு மக்களுக்கு சிறந்த வைத்திய சேவையை வழங்கும் நோக்கில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை  இன்று ஞாயிற்றுக்கிழமை (20) திறந்துவைக்கப்பட்டது. 

தென்னாசியாவிலேயே சிறந்த கூட்டுறவு வைத்தியசாலையான இதனை, மீண்டும் அதே நிலைக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யுத்தத்திற்கு முன்னர் சிறப்பான முறையில் இயங்கிய இவ்வைத்தியசாலை பின்னர் வீழ்ச்சியை எதிர்நோக்கியிருந்தது. எனினும், இதன் ஆரம்பகால உறுப்பினர்கள் மற்றும் வைத்தியர்களின் ஒத்துழைப்புடன் பணிப்பாளர் சபை உருவாக்கப்பட்டு தொடர்ந்து மக்களுக்கு வைத்திய சேவை வழங்கப்பட்டுவந்தது.  காலத்திற்கு காலம் பல அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களின் உதவியுடன் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றுவந்த போதிலும், தற்போது நவீன முறையில், சிறந்த மருத்துவ சேவைவை வழங்கும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ளது.புனரமைக்கப்பட்ட இவ்வைத்தியசாலையைத் திறந்துவைக்கும் இன்றைய நிகழ்வில், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்,

புனரமைப்புக்கு நிதியுதவி வழங்கியவர்களின் குடும்பத்தினர், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.சுரேந்திரகுமாரன் மற்றும் சிரேஷ்ட வைத்தியர்கள்,

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியலாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், இதன் ஆரம்பகால உறுப்பினர்கள்,  பிரதேச மக்கள் எனப் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.

No comments