அநீதிகளை வெளிக்கொணர்ந்ததாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்


போர்க்காலத்தில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

போர்க்காலத்தில் கொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 43 தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளனர்.

அதேபோன்று போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்த சிங்கள ஊடகவியலாளர்களும் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

சிங்கள ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க போருக்கு எதிரானவர் என்ற காரணத்தினாலேயே அவரது படுகொலை தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தினார்.

No comments