நெடுந்தீவு பிரதேச சபையின் விசாரணை முடக்கம்

நெடுந்தீவுப் பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவு தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பணிகள் முடங்கியுள்ளன.

இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தப் பணிகள் இடம்பெறவில்லை என்று தெரிய வருகின்றது.

நெடுந்தீவுப் பிரதேச சபையின் உப தவிசாளர் மே மாதம் 9ஆம் திகதி உயிரிழந்ததையடுத்து அந்தப் பதவி வெற்றிடமாகியது. சபையில் எந்தவொரு கட்சிக்கும் 50 சதவீதத்துக்கு மேல் ஆசனங்கள் இன்மையால், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடு.

உப தவிசாளர் தெரிவுக்காக நான்கு கூட்டங்கள் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடத்தப்பட்ட போதும் கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து உள்ளூராட்சி ஆணையாளர், அப்போதைய வடக்கு உள்ளூராட்சி அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறிவித்தார். உபதவிசாளர் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு ஓய்வுபெற்ற நீதிபதி வசந்தசேனன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

ஒக்ரோபர் மாதம் 25ஆம் திகதியுடன் வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர், விசாரணை நடத்துவதற்கான ஆணையை – நியமனத்தை வழங்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வசந்தசேனன் கோரியுள்ளார்;.

இதுவரையில் மீள் நியமனம் வழங்கப்படவில்லை. நெடுந்தீவுப் பிரதேச சபை உபதவிசாளர் இன்றியே இயங்கி வருகின்றது.

No comments