பேரவை பிரச்சினைக்கு விசேட குழு!


தமிழ் மக்கள் பேரவையில் பங்காளிக்கட்சிகளது முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து முடிவு காண மூவரடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இன்றைய கூட்டத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை கருத்தில் கொண்டு சர்ச்சைகளிற்கு முடிவு காணவேண்டுமென்ற கருத்தினையடுத்து குழு அமைப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே முதலமைச்சரிற்கென அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களை வெளியே கசியவிடப்பட்டமை தொடர்பில் தமது கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமைச்சராக தெரிவானவரும் பின்னர் ஊழல் குற்றச்சாட்டில் பதவி துறைந்தவருமான ஒருவர் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதென கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் இன்றைய கலந்துரையாடலில் சுரேஸ்பிறேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டுமே கலந்து கொண்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் புளொட் கலந்துகொள்ளவில்லை. 

பேரவையிலிருந்து கட்சிகளை வெளியேற்ற கோரும் விவகாரத்தை முடித்து, இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்து வைக்க மூன்று பேர் கொண்ட குழுவொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments