கைவிட்டது ஈபிடிபி:கூட்டமைப்பின் பச்சிலைப்பள்ளி தோல்வி!


கிளிநொச்சி மாவட்டத்தில் கூட்டமைப்பு வசமுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் வரவு செலவுதிட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை மற்றொரு பிரதேசசபையான கரைச்சி பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் நான்கு கூடிய வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் 2019ம் ஆண்டிற்கான வரவு செலவுதிட்டம் தவிசாளர் க.சுரேனால் முன்வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க எதிராக ஈபிடிபி,சுயேட்சைகுழு,சிறீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழ் தேசிய மகக்ள் முன்ணணி உறுப்பினரென எழுவர் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.இதனால் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடகிழக்கிலுள்ள பெரும்பான்மையான உள்ளுராட்சி சபைகளை தனக்கு பெரும்பான்மையற்ற நிலையில் கூட்டமைப்பு ஈபிடிபி உள்ளிட்ட கட்சிகளது ஆதரவுடன் கைப்பற்றியிருந்தது.

எனினும் யாழ்.மாநாகரசபை,சாவகச்சேரி நகரசபை மற்றும் கரவெட்டி பிரதேச சபையென பெரும்பாலான சபைகளில் வரவு செலவுத்திட்டங்களிற்கு ஈபிடிபி ஆதரவளிக்க மறுத்தமமையினால் அவை தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீளாய்வு செய்யப்பட்ட வரவு செலவுத்திட்டங்களிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவளித்துவருகின்ற நிலையில் அவை நிறைவேற்றப்பட்டுவருவது தெரிந்ததே.   

No comments