ரணிலுக்காக தூக்கியது கூட்டமைப்பு: எதிர்கட்சி தலைவர் கதிரையும் வேண்டுமாம்!


நாடாளுமன்ற  உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை உள்ளதை நிரூபிக்கும் வகையிலான பிரேரணை அதிக பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கை மூலம் இன்று மாலை அறிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவால் முன்வைக்கப்பட்ட யோசனையானது 117 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. இதற்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை என்பதுடன், மக்கள் விடுதலை முன்னணி இந்த வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

எனினும் கூட்டமைப்பு தொடர்ந்தும் எதிர்கட்சியாகவே செயற்படுமென நாடாளுமன்றில் மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் இரா.சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவியை காப்பாற்ற முற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

No comments