மைத்திரி இலங்கையின் சிங்கள ஜனாதிபதியே?


அடிக்கொருதரம் நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரி தன்னையொரு சிங்கள ஜனாதிபதியாக காண்பித்துக்கொள்ள தவறுவதேயில்லை.

அண்மையில் மட்டக்களப்பு வவுணதீவு காவலரனில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போது நிரோசன் இந்திக்க பிரசன்ன மற்றும் கணேசன் தினேஸ் ஆகிய இரண்டு பொரிஸார் கொல்லப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் தமிழர், மற்றையவர் சிங்களவர்.அவர்கள் தொடர்பில் மைத்திரி காட்டிவரும் சிங்கள தமிழ் பாகுபாட்டை முன்னாள் அரசியல் கைதியாகியிருந்து விடுதலையான ஜெலீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொல்லப்பட்ட சிங்களவரின் இறுதிச் சடங்கிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி மைத்திரி தமிழரான தினேஸின் இறுதிச் சடங்கிற்கு செல்லவில்லை. இரங்கல் செய்தி மட்டும் அனுப்பியிருந்தார். சரி அதில் கூட ஒருவகையில் நியாயமிருந்தது என்று எடுத்துக்கொள்ளலாம் இருவரின் இறுதிச் சடங்கும் ஒரே நாளில் நடைபெற்றமை மற்றும் கிழக்கு மாகாணம் அதிக தொலைவில் உள்ளமை போன்ற காரணங்கள். தவிர ஜனாதிபதி மைத்திரிக்குஇரண்டு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில் இருக்கக் கூடிய ஏதாவது நடைமுறை சார்ந்த சிக்கல்கள இருந்திருக்கலாம்.

ஆனால் நேற்று கொல்லப்பட்ட சிங்களப் பொலிஸாரின் குடும்பத்தினை மட்டும் ஜனாதிபது செயலகத்திற்கு அழைத்து ஆறுதல் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரி, குறித்த உயிரிழந்த பொலிஸாரின் மனைவிக்கு காலி நாகொட பிரதேச சபையில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பணி நியமனம் வழங்கியதோடு, மேற்கொண்டு உயிரிழந்தவரின் இளைய மகனின் கல்விச் செலவையும், குடும்பத்தினரின் நலன்புரி விடயங்களையும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் இதில் அதே சம்பவத்தில் உயிரிழந்த தமிழ்ப் பொலிஸாரின் குடும்பத்தினர் அழைக்கப் பட்டிருக்கவில்லை.

இதனிடையே குறிப்பிட்ட விடயம் வேறு பலராலும் முன்வைக்கப்பட்டு அது ஜானாதிபதி மைத்திரியின்; கவனத்திற்குச் சென்று அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரி குறித்த அந்த தமிழ்ப் பொலிஸாரின் குடும்பத்தினரை அழைத்து சந்தித்துக் கதைத்தாலும் அந்தச் சந்திப்பு ஆத்மார்த்தமான ஈடுபாடும்,நல்லெண்ணமும் கொண்ட ஒரு சந்திப்பாக விளங்காதென தெரிவித்துள்ளார் அரசியல் கைதியான இருந்து மைத்திரியால் பிரச்சாரங்களுடன் விடுக்கப்பட்ட ஜெலீபன்.

தன்னை கொலை செய்ய வந்தவரையே மன்னித்;து மைத்திரி விடுவித்ததாக பிரச்சாரப்படுத்தப்பட்ட அரசியல் கைதியாக இருந்த ஜெலீபனே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments