ரணிலுக்கு தூக்கினால் எதிர்கட்சி தலைவர் பதவி பறிப்பு?


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்குமானால், அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிப்பதற்கு உரிமை இல்லாமல் போகுமென  நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டதாகவும், இதற்கமைய நிபந்தனைகளுடன் ஆதரவைத் தெரிவிக்க அவர்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்த டலஸ் அலகப்பெரும ஐக்கிய ​தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமானால் அதில் எமக்குப் பிரச்சினை இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

No comments