ராஜிதாவிற்கு சுகாதாரம் வேண்டாம்: வைத்தியர்கள் போர்க்கொடி


நாளை மீண்டும் பதவியேற்கவுள்ள புதிய அமைச்சரவையில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியே வழங்கப்படக்கூடாதென மஹிந்த ஆதரவு அரசாங்க வைத்திய சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசாங்க வைத்திய சங்கத்தின் 14 ஆயிரம் வைத்தியர்கள் கைச்சாத்திட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கடிதமொன்றையும் கையளித்துள்ளனர்.

ராஜிதவின் பதவிக்காலத்தில், வைத்தியர்களுக்கு எதிராக பாரிய உரிமை மீறல் இடம்பெற்றதாக, அக்கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில், ராஜித சேனாரத்னவுக்கு, சுகாதார அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே பல போராட்டங்களையும் வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments