ஒரு நாளுள் மீண்டும் இடம்பிடித்த அறிவிப்பு நினைவுக்கல்!


மைத்திரி வருகையினை முன்னிட்டு இடிக்கப்பட்டு பின்னர் அவராலேயே மீள அமைக்க பணிக்கப்பட்ட அறிவிப்பு நினைவுக்கல் 24 மணிநேரத்துள் நாட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

1954ம் ஆண்டு இரணைமடு புனரமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் பதிக்கப்பட்ட நினைவுக்கல் இரணைமடு குளத்தின் முன் சுற்றுவட்டப்பகுதியில் மீள புனரமைப்பு செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது.

நேற்று வடக்கு மாகாண ஆளுநர் மீளவும் இருந்த இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு பணித்ததுடன் ஜனாதிபதிக்கும் இது குறித்து ஆளுநர் தெரியப்படுத்தியிருந்தார். இதையடுத்து ஜனாதிபதி 24 மணிநேரத்தில் மீள அதே இடத்தில் அமைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். எதிர்வரும் புதன்கிழமை ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த நினைவு கல் சுமார் 8 இஞ்சி அகலம் கொண்டதுடன், பாரிய கருங்கல் ஒன்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

குறித்த நினைவு அறிவிப்புக்கல்லே 24மணி நேரத்துள் ஆளுநரின் பணிப்பில் மீண்டும் பழைய இடத்திலேயே நாட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

No comments