தூதரக விசுவாசிகளின் பாரதி நினைவேந்தல்!


யார் கண்டுகொள்கிறார்களோ இல்லையோ தனது விசுவாசிகள் சகிதம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் பாரதியார் விழாவை கொண்டாட தவறுவதில்லை.

மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த தினத்தினை யாழ்.நல்லூர் அரசாடி சந்தியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி யாழிலுள்ள இந்திய துணைதூதர் பாலச்சந்திரன் நடத்தியுள்ளார்.

இந்தியாவை புறந்தள்ளி அரசியல் தீர்வு இல்லையென தூதுவராலயத்தில் அடைக்கலம் புகுந்துள்ள முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி,விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கம் ,சீ.வீ.கே.சிவஞானம்,சி.தவராசா மற்றும் மாநகர முதல்வர் ஆனோல்ட் உள்ளிட்ட தரப்புக்கள் நன்றி மறவாது ஆட்சியிழந்த பின்னரும் நிகழ்விற்கு வந்துள்ளனர்.

விடுதலைப்போராட்ட வரலாற்றில் திலீபனின் தியாகத்தை மழுங்கடிக்க காந்தி ஜெயந்தியையும் மற்றும் பாரதி,வள்ளுவர் சிலைகளை முழத்திற்கொன்றாக நிறுவி போராட்ட நினைவுகளை மறக்கடிக்கவும் இந்திய துணைதூதரகம் பாடுபட்டுவருகின்றது.

எனினும் மாவீரர்கள் தியாகத்தினால் அது தோல்வியுற்றே வருகின்ற நிலையில் தளராது தமது விசுவாசிகள் சகிதம் தூதரகம் நாடகங்களை அரங்கேற்றியே வருகின்றது. 


No comments