தேசத்தின்குரலுக்கு பல்கலையில் அஞ்சலி!


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று நினைவுகூரப்பட்டுள்ளார்.அவரது 12 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது அவரிற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ,மாணவர்கள் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

No comments