கூட்டமைப்பு தரகு வேலையில்: டக்ளஸ் சொல்கிறார்?


மீள்குடியேற்றம் புனர்வாழ்வு புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி போன்ற அமைச்சினை கையாள தமக்கு திறமை இருப்பதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார்.இந்த அமைச்சுக்கள் தற்போது நாட்டின் பிரதமர் வசமே தற்போது இருக்கின்றது. அந்தவகையில் எமது மக்களின் உணர்வுகளுடனும் பாதிப்புகளுடனும் தொடர்புடைய ஒரு விடயமாக இந்த அமைச்சு இருக்கின்ற நிலையில் அந்த அமைச்சை செயற்படுத்தும் தகுதி எம்மிடமே இருக்கின்றதெனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

அல்லாதுவிடின் அந்த அமைச்சை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஏன் அவர்கள் முன்வந்து செய்யவில்லை என்பதே இங்கிருக்கின்ற முக்கியமான கேள்வி எனவும்; டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

தரகு அரசியலையே கூட்டமைப்பினர்; விரும்புகின்றார்கள். அதையே அவர்கள் முன்னெடுத்தும் வருகின்றார்கள். சமஷ்டி அடிப்படையில்தான் எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறியிருந்த போதிலும் அண்மையில் காலிமுகத்திடலில் நடந்த கூட்டத்தின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒற்றையாட்சியின் கீழ்தான் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று தெளிவுபடக் கூறியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்று பௌத்தத்திற்கு முன்னுரிமை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறிவருகின்ற போதிலும் எமது கட்சியின் நிலைப்பாடு மதசார்பற்ற நாடு என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தை அவர்கள் கூறிவருவதானது தற்போது பிரதமரின் கருத்தினூடாக அம்பலப்பட்டுள்ளது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை தவிர்ந்த ஏனைய சக தமிழ் கட்சிகள் மக்கள் நலன் சார் திட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்றும்  டக்ளஸ் மேலும் தெரிவித்தார்.

No comments