இனஅழிப்பிற்கு வெள்ளையடிக்கும் சாந்தி எம்பி?


அண்மைக்காலமாக கூட்டமைப்பு ஒருபுறம் புலிநீக்க அரசியலை செய்தவாறு மறுபுறம் இன அழிப்பு அரசிற்கு முண்டுகொடுத்துவருவது தெரிந்த ஒன்றே.அவ்வகையில் இன்று திறந்து வைக்கப்பட்ட ஒதியமலை நினைவேந்தல் தூபியில் அப்பாவி பொதுமக்களை யார் கொன்றார்களென்ற பதிலை சொல்லாது மூடி மறைப்பது வழமையாக இருக்கின்றது. 

அப்பாவித்தமிழ்மக்கள் 32 பேர் இலங்கை படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஒதியமலைப்படுகொலையின் 34ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு மிலேச்சத்தனமான முறையில் ஒதியமலைப் பகுதியில் இலங்கை படைகளால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்

அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் டிசெம்பர் மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் 2 ஆம் திகதியாகிய இன்று 34 ஆம் ஆண்டு நினைவுநாள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தப்  படுகொலைநாளின் முப்பத்து நான்காம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வமைதியுடன் நடைபெற்றன. 

இதற்கான நிதியை தனது நாடாளுமன்ற ஒதுக்கீட்டிலிருந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா வழங்கியிருந்தார்.

அதிலேயே கொல்லப்பட்ட மக்கள் என தெரிவித்து தனது சொந்தபெயரை பரப்புவதில் ஈடுபட்டார்.

ஏற்கனவே விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்ட மாமனிதர் கௌரவத்தை கூட்டமைப்பு இருட்டடித்துவருவது தெரிந்ததே

No comments