சுதந்திரக் கட்சி எம்பிக்கள் மூவர் ஐதேகவிற்குத் தாவினர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடிய சற்று நேரத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க, லக்ஷ்மன் செனிவிரத்ன ஆகியோர் ஆளும்கட்சி வரிசையில் சென்று அமர்ந்து கொண்டனர்.

முன்னதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 21 பேரும் எதிர்க்கட்சியில் அமர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

எனினும், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆளும் கட்சிக்குத் தாவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூவரும் ஆளும் கட்சிப் பக்கம் சென்றபோது ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசைகளில் கைகளைத் தட்டி – அவர்களுக்குக் கைலாகு கொடுத்து – கட்டிப் பிடித்து வரவேற்றனர். இதன்போது எதிரணி வரிசையில் அமர்ந்திருந்த மஹிந்த அணி எம்.பிக்கள் கூச்சலிட்டனர்

No comments