ஜனாதிபதி மைத்திரி பின்வாங்கமாட்டார்?


நாடாளுமன்றத்தைக் கலைப்பதாகத் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுக்கப்பட்ட வர்த்தமானியை, எச்சந்தர்ப்பத்திலும் அவர் இரத்துச் செய்ய மாட்டார் எனத் தெரிவித்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பந்துல குணவர்தன எம்.பி, நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கு, தேர்தல் ஒன்றே தீர்வு என்பதாலேயே, ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்திருந்தாரெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அவர், பிரதமர் அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்களையும், ஜனாதிபதி வெளியிட்டிருந்தார். வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதற்கான அதிகாரம், ஜனாதிபதிக்கு  இருக்கிறது” எனக் கூறினார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாது என்பதாலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கலைத்தார் எனவும் தெரிவித்தார்.

No comments