மன்னாரிலும் சீனர்கள் !


மன்னார் மற்றும் மாந்தை துறைமுகங்கள் ஊடாக சிறிலங்காவுடன் சீனர்கள் மேற்கொண்ட பண்டைய வணிகம் தொடர்பாக, சீன மற்றும் சிறிலங்கா தொல்பொருள் ஆய்வாளர்கள் கூட்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

சீனாவின் சிசுவான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினருடன், களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் திணைக்களத்தின் குழுவினர் இணைந்து இந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாந்தை துறைமுகம் தொடர்பாக, எந்த விரிவான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று, இந்த ஆய்வுக் குழுக்களுக்குத் தலைமை தாங்கும், களனி பல்கலைக்கழக  பேராசிரியர் கலாநிதி மங்கள கட்டும்பொல, தெரிவித்துள்ளார்.

சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் அண்மையில் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியிலும் சீன வணிகத் தொடர்புகள் குறித்த அகழ்வாய்வுகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments