பிரதமர் செயலகத்திலிருந்து வெளியேறினார் மகிந்த

பிரதமர் செயலகத்திலிருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறிவிட்டார் என கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தவும், புதிய அமைச்சரவையும் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்தது.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களால் தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்த பின்னரே இவ்வாறு இடைக்கால தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனவே, நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் பிரதமருக்குரிய செயலகத்திலிருந்து மஹிந்த வெளியேறினார் என்றும்,  எனினும, ரணில் விக்ரமசிங்க தற்போதும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் தங்கியிருக்கிறார். இது பற்றி எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் சட்டத்தை ரணில் மதிப்பாரானால் அலரிமாளிகையைவிட்டு ரணில் விக்கிரமசிங்க உடன் வெளியேறவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments