நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்ற மைத்திரி!


கூட்டமைப்பு மைத்திரியுடன் பேசி ரணிலை கதிரையேற்றலாமென கண்டுவந்த கனவு பொய்த்துப்போயுள்ளது.தேர்தலிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பில் 7ம் திகதி உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பிரதமர் பதவியில் மாற்றம் இல்லை என ஜனாதிபதி கூறியதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


இதனிடையே தாம் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பதவி விலகப்போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச மீண்டும்  கூறியுள்ள நிலையில் மைத்;திரியின் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்திருக்கும் விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனிடையே இன்றிரவு  அல்லது நாளையிரரு தீர்வென சுமந்திரன்,சித்தார்த்தன் தரப்பின் தகவல்களை அடிப்படையாக வைத்து தகவல் தெரிவித்துக்கொண்டிருந்த தரப்புக்கள் மௌனம் காக்க தொடங்கியுள்ளன. 

No comments