சாவகச்சேரி நகரில் இலவச விளம்பரத்தில் தமிழரசு!


சாவகச்சேரி பஸ் தரிப்பிடத்தில் தமிழரசில் அடுத்த தேர்தல் கதிரைக்கான கனவிலிருக்கின்ற அகிலன் எனும் நபரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள லவ்லி கூல் பார், தாய் வீடு பத்திரிகை நிறுவனத்தின் விளம்பர பலகைகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.இதனால் நகரசபை இலட்சக்கணக்கான வருமானத்தை இழக்க தொடங்கியுள்ளது.

எதுவித அனுமதியும் பெறவும் இல்லை, கட்டணமும் கட்டப்படவில்லை. அத்துடன் மேற்படி விளம்பரங்களை அகற்றுமாறு தன்னால் தவிசாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டும் அகற்ற முடியாது என சயந்தனின் எடுபிடியாக உள்ள தவிசாளரான சிவமங்கை மறுத்துவிட்டதாக செயலாளரான சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் சிங்கர் நிறுவனத்தினரால் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரத்திற்கான கட்டணமாக ஒரு இலட்சத்து79 ஆயிரம் 2015 ஆம் ஆண்டு அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நேற்றைய நகரசபை உறுப்பினர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது இன்று மாலை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளதாக செயலாளர் கூறியுள்ளார்.

எனினும் இன்றைய தினமான வெள்ளிக்கிழமை வரை இன்னமும் அகற்றப்படவில்லை. செயலாளருடன் தொடர்புகொண்டு கேட்டபோது உதவிதவிசாளர் தன்னை செயற்பட விடாமல் தடுப்பதாக தெரிவிக்கிறார். 

இதன் மூலம் விளம்பரம் மூலம் வரவேண்டிய வருவாயினை சாவகச்சேரி நகரசபை இழக்க தொடங்கியுள்ளது.

கனடாவிலிருந்து வருகை தந்துள்ளதாக கூறப்படும் குறித்த அகிலன் எனும் நபரே புதிய சுதந்திரன் எனும் தமிழரசு கட்சி பத்திரிகையினை வெளியிட்டுவருகின்றார்.அத்துடன் பல வர்த்தக நிறுவனங்களையும் நடத்திவருகின்றார்.

அவற்றினுடைய விளம்பரங்களையே தற்போது இலவசமாக அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.  

No comments