ஓதியமலை நினைவேந்தல் அனுஸ்டிப்பு!


அப்பாவித்தமிழ்மக்கள் 32 பேர் இலங்கை படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஒதியமலைப்படுகொலையின் 34ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு மிலேச்சத்தனமான முறையில் ஒதியமலைப் பகுதியில் இலங்கை படைகளால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் டிசெம்பர் மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் 2 ஆம் திகதியாகிய இன்று 34 ஆம் ஆண்டு நினைவுநாள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தப்  படுகொலைநாளின் முப்பத்து நான்காம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வமைதியுடன் நடைபெற்றன. இந்த நினைவுநாள் நிகழ்விலே பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந் நிகழ்வில் முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கந்தசாமி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments