இராணுவ பங்களிப்புடன் சிவில் நிர்வாகம்?


வடமாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட மரம் நடுகை திட்டத்தில் யாழ் மாநகரசபை, கோப்பாய் பிரதேசபை, நல்லூர் பிரதேசபை மாவட்ட செயலகம் இவர்களுடன் இராணுவத்தினரும் இணைந்துள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகரசபையினால் சிவில் நடவடிக்கைகளில் படையினரை பயன்படுத்தக்கூடாதென்ற தீர்மானம் கிடப்பில் போடப்பட்டு பகிரங்கமாகவே படையினரது பங்கெடுப்புடன் மரநடுகை முன்னெடுக்கப்படுவது அம்பலமாகியுள்ளது.


தமிழ் தேசிய மக்கள் முன்னணி படையினரை யாழ்.மாநகர சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவது தொடர்பில் தொடர்ந்தும் குரல் எழுப்பி வந்த போதும் அதனை பொருட்படுத்தாது ஆளுநர் மற்றும் படைதரப்புடன் நெருங்கிய தொடர்பை பேணும் மாநகர முதல்வர் தனது மனப்போன போக்கில் செயற்பட்டுவருகின்றார்.

அதன் தொடர்ச்சியாக யாழ்.பண்ணை மற்றும் செம்மணிவெளிகளில் படையினரது பங்களிப்புடன் மரநடுகை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 

இதனிடையே சிவில் நிர்வாகத்தில் ராணுவம் தலையிடுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவம் உதவிகளையே செய்து வருவதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதில் ராணுவத்தினருக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை. ஆனாலும் ராணுவம் மக்களுக்கு உதவிகள் செய்து வருவதை யார் சொல்லியும் நாங்கள் நிறுத்தப் போவதில்லை;. தொடர்ந்தும் அதிக உதவிகளையே ராணுவம் மக்களுக்கு வழங்கி வரும் என்று யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments