மாவீரர் நாளில் கூடுகின்றது இலங்கை நாடாளுமன்றம்!


மாவீரர் நாளான இன்று கூடுகின்ற இலங்கையின்  நாடாளுமன்ற சபை அமர்வின் போது, சுற்றுலாத்துறை வீழ்ச்சி குறித்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைக்க ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மறுபுறம் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையில் கூட்டணி விடயத்தில் இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்று குறித்த பிரேரணையினை ஜக்கிய தேசிய முன்னணி கொண்டுவரவுள்ளது.

இதனிடையே மஹிந்தவிற்கு எதிராக துமிந்த திசாநாயக்க தலைமையில் புது அணி உருவானாலும் அதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பங்குக் கொள்ள மாட்டார்கள் என்று தென்னிலங்கை தகவல்கள் கூறுகின்றன.

மறுபுறம் ஐக்கிய தேசிய முன்னணியில் பிளவை ஏற்படுத்தி, வேட்டையாடும் வியூகம் தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதனை ஐக்கிய தேசிய கட்சியினர் உணர்ந்தே இருப்பதாக அறிய முடிகிறது.

இதனை கருத்தில் கொண்டு மஹிந்த ஆதரவு புலத்தை உடைப்பதில் ஐக்கிய தேசிய கட்சியினர் மும்முரமாகியுள்ளனர்.

இதனிடையே மஹிந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் இயலுமை இல்லை.இனியும் அமைச்சுப் பதவியை வகிக்க முடியாது. ஜனாதிபதியை தனித்து சந்திக்கவே கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு வந்தேன்.அதனை மீண்டும் நான் மஹிந்த பக்கம் சென்றுவிட்டதாக பிரச்சாரப்படுத்தப்படுவதாக வசந்த சேனாநாயக்க தமது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜக்கிய தேசியக்கட்சியிலிருந்து மஹிந்த பக்கம் பாய்ந்து அமைச்சரான அவர் மீண்டும் தாய் கட்சி திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments