ரணிலுக்கு 122:மஹிந்தவிற்கு 90 -மனோவின் கணக்கு!


இத்தனை நாளும் வாக்கெடுப்பை வன்முறையால் தடுத்து, அதனால் நாடு முழுக்க கெட்ட பெயரை வாங்கிவிட்ட காரணத்தால், இன்று எதையோ சொல்லி சபையில் இருந்து வாபஸ் வாங்கி மகிந்த கும்பல் வெளிநடப்பு செய்து விட்டதென முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்தது, பாராளுமன்ற தெரிவுக்குழு வாக்கெடுப்புதான். ஆகவே இன்றுதான் முதன்முதல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதுவும் இலத்திரனியல் பெயர்பலகையில் வாக்களித்தோர் பெயர்கள் விழுந்து, அப்பட்டமாக மகிந்த கும்பலின் வாய்சவடால் அம்பலப்பட்டு விட்டது. அதனால்தான் நீண்டநாள் எதிர்பார்த்த வாக்கெடுப்பு நடந்தது.

இது பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு இல்லை என எனக்கு தெரியும். ஆனால், இது முதல் கட்டம். இனி எப்படி ஆட்சியை பிடிப்பது, அடுத்த தேர்தல் வரை இடைக்கால அரசாக இருக்க போகிறோமா, என்பவை பற்றியெல்லாம் நாம் இப்போது ஆராய்கிறோம்.

ஆகவே எல்லாவற்றையும் விமர்சனம் செய்யும் நண்பர்கள் இந்த கட்டத்திற்கு இதை கொண்டுவர நாம் எவ்வளவு பாடுபட்டு உள்ளோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இதில் சிறுபான்மை கட்சிகள் பெரும்பங்கை வகித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு வழங்க, ஐதேமு அரசுக்குள் இருந்து, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை பங்களிப்பு செய்துள்ளன.
அதனால்தான். தெரிவுக்குழுவின் எம் சார்பான 7 உறுப்பினர்களில், கூட்டமைப்பு, ஜேவிபி, ஐதேக, மு.கா, தமுகூ, அஇமகா, ஹெலஉறுமய என அனைத்து கட்சிகளும் தலா ஒவ்வொரு உறுப்பினர்களாக, விட்டுக்கொடுப்புடன் பிரித்து கொண்டுள்ளோம்.
இனி வாக்கெடுப்பு தொடர்பான கணக்குகளை பார்ப்போம்;. இதில் ஆதரவாக 121 வாக்குகள் விழுந்தன. எதிராக ஒரு வாக்கும் விழவில்லை. சதுர சேனாரத்ன என்ற ஒரு ஐதேக உறுப்பினர் தாமதமாக வந்தார். ஆகவே அவர் வாக்களிக்கவில்லை. எனினும் 121 அல்லது122 என்று சொல்லலாம். விழுந்த வாக்குகளில், 14 வாக்குகள் ததேகூ, 6 வாக்குகள் ஜேவிபி.

மொத்தம் 122ல், 20 வாக்குகள் ததேகூ,ஜேவிபி. ஆகவே ஐதேமு வாக்குகள் 102 ஆகும். ஐதேக உறுப்பினரான சபாநாயகரின் வாக்கு அவசியமானால் விழுந்தால் மொத்த 103 ஆகும். ஆக மொத்தம் 123 ஆகும்.
சபை மொத்த வாக்கான 225 ல் 123 ஐ கழித்து பார்த்தால், மகிந்த கும்பலுக்கு 102 இருக்க வேண்டும்.
இங்கே தான் விடயம் இருக்கிறது. இதில் அனைவரும் மகிந்த அணிக்கு வாக்களிக்க தயார் இல்லை. வெல்கம சுயாதீனமாக இருக்க போவதாக சொல்கிறார். சபையில் என் பக்கத்து ஆசனக்காரரான ரத்தன தேரர் தான், ரணிலுக்கு எதிர்ப்பு. ஆனால், இந்த வாக்கெடுப்பில் நடுநிலை என எனக்கு சொன்னார்.
இதைத்தவிர, பல சிறீPலங்கா சுதந்திர கட்சிகாரர்கள் ஊசலாட்டத்தில் உள்ளார்கள். துமிந்த தலைமையிலான அணி மகிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை.

No comments