இலங்கைக்கான நிதியுதவியை இடை நிறுதித்தியது சர்வதேச நாணய நிதியம்!

இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இடைநிறுத்தியமைக்கான காரணத்தை இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் ஹொி ரைஸ் கருத்துத் தெரிவிக்கையில்:

இலங்கைக்கான நிதிஉதவியை சர்வதேச நாணய நிதியம் இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் அரசியல் நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை நாங்கள் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளோம்.

2016 ம் ஆண்டு சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தது.

முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் சர்வதேச நாணயநிதியம் இந்த நிதியுதவியை வழங்க இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#International Monetary Fund #IMF

No comments