நவாலியில் அகப்பட்ட மாட்டுத்திருடர்?


பொன்னாலை பகுதியில் கடத்தப்பட்ட பெருமளவிலான மாடுகள் யாழ்.நகரிலுள்ள முஸ்லீம் இறைச்சி கடை உரிமையாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் நவாலி மக்களின் உதவியுடன் குறித்த கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.

பொன்னாலையைச் சேர்ந்த மக்களின் பெருமளவிலான கால்நடைகள் கடந்த 20ம் திகதி களவாடப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவ்வூர் இளைஞர்களின் தேடுதல் நடவடிக்கையால் கால்நடைகள் நவாலிப்பகுதியில் உள்ள முஸ்லிம் இறைச்சி வியாபாரிகளிடமிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஆவை இறைச்சிக்கு வெட்டுவதற்கு தயார் நிலையில் கட்டப்பட்டிருந்ததாக அப் பிரதேசமக்கள் தெரிவித்தனர். குறித்த திருட்டுக்கள் தொடர்பில் பொன்னாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் வேறு சிலரும் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் கடத்தப்பட்ட மாடுகளில் ஒன்றை காணவில்லை என்பதுடன் மேற்படி நவாலியிலுள்ள முஸ்லிம் இளைஞர்களின் வீட்டில் பெருந்தொகையான மாட்டு இறைச்சியும் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொன்னாலைப் பகுதியில் கடந்தகாலத்தில் தொடர்ச்சியாக பலகால்நடைகள் காணாமல் போயுள்ளதுடன் அண்மையில் பாடசாலை மற்றும் பிள்ளையார் ஆலயத்திலும் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments