மைத்திரியுடன் இணைய ரணில் தயாராம்?

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, ​எதிர்காலத்தில் பணியாற்றத் தான் தயாரென, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் “தி இந்து” பத்திரைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“அவருடன் இணைந்துப் பணியாற்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பக்கச்சார்பாகச் செயற்படுவதற்கு, அரசமைப்பின் அதிகாரம் வழங்கப்படவில்லை” என்றும், விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்ட வேண்டுமென்றும் தனக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகவும் தெரிவித்துள்ள ரணில், அவர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டாததிலிருந்தே, அவர்களிடம் பெரும்பான்மை இல்லையென்பது புலனாகிறது என்றும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தாமதிக்கும் போது, நாடு நிலையற்ற தன்மைக்குச் செல்கிறது என்றும் மேலும் கூறியுள்ளார்.

No comments