தலைமையினை தந்தாலேயே பிரதமர் பதவியேற்பு!


ஜக்கிய தேசியக்கட்சியின் தலைமை பொறுப்பினை தன்னிடம் தந்தாலேயே பிரதமர் பதவியினை ஏற்கமுடியுமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரணிலை பிரதமராக்கப்போவதில்லையென மைத்திரி விடாப்பிடியாக உள்ளநிலையில் சஜித்தை பிரதமராக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் தன்னை பிரதமர் பதவியை ஏற்க ஜனாதிபதி மைத்திரி கோரியதை சஜித்தும் ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே தன்னை  ஜக்கிய தேசியக்கட்சியின் தலைவராக்கினால் மட்டுமே பிரதமர் பதவியினை ஏற்கமுடியுமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனினும் ரணிலோ கட்சி தலைமை பதவியினை விட்டுக்கொடுக்க மறுத்துவருகின்றதுடன் சஜித்திற்கான பதவிகளை வழங்க மறுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments