தட்டாதெருச் சந்தியில் ரயர் கொழுத்தியதால் நேற்றிரவு பதற்றம்நேற்ற இரவு யாழ்ப்பாணம் தட்டாதெருச் சந்தியில் ரயர் போட்டுக் கொழுத்தியதால் அப்பகுதியில் பெருமளவு விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதால் சில மணிநேரம் அப்பகுதி பதற்றமடைந்தது.

நேற்று மாவீரர் நாள் நிகழ்வுகள் தேசமெங்கும் நினைவுகூரப்பட்டிருந்தது. இதனைத் தடுக்கும் பல்வேறு நெருக்கடிகளை இராணுவத்தினரும், பொலிஸாரும் தமிழர் தாயகம் எங்கும் ஏற்படுத்தியவாறிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென யாழ்ப்பாணம் தட்டாதெருச் சந்திக்கு ரயர்களுடன் வந்த சில இளைஞர்கள் சந்தியில் ரயர்களைப் போட்க் கொழுத்திவிட்டுச் சென்றுள்ளனர். ரயர்கள் கொழுந்துவிட்டு எரிவதை அறிந்த பொலிஸார் விசேட அதிரடிப்படையினரை அழைத்ததன் பேரில் எரிந்துகொண்டிருந்த ரயர்களை அணைக்க முற்பட்டதோடு ரயர் கொழுத்தியவர்கள் யார் என அப்பகுதிகளில் தேடுதல் வேட்டையும் மேற்கொண்டிருந்தர்.

இதனால் தட்டாதெருப் பகுதியில் சில மணி நேரம் பதற்றம் நிலவியது.

No comments