சாவகச்சேரி நகரசபை: சயந்தனின் திருவிளையாடல்!


தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிகள் குடுமிப்பிடி தலைமையினை தாண்டி அதன் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் வரை நீடித்துள்ளது.அவ்வகையில் சாவகச்சேரி தமிழரசுக்கட்சி அமைப்பாளர் சயந்தனிற்கு கட்டுப்பட மறுத்;த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஒருவரை நாவற்குழியில் அமைக்கப்பட்டு வரும் சட்டவிரோத பௌத்த விகாரையில், யாத்திரீகர் விடுதி மற்றும் தங்குமிடம் என்பன அமைக்கப்பட வேண்டுமென தனிச்சிங்களத்தில் கடிதம் அனுப்பியதாக சிக்க வைத்துள்ள அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. 
முன்னதாக வடமாகாணசபையினை செயற்படவிடாது கடைசிவரை குழப்பங்களை விளைவித்த சயந்தன் தற்போது சாவகச்சேரி நகரசபையில் கடைவிரித்துள்ளதையடுத்தே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கனகசபை கஜிதரன் என்பவர் கடந்த தேர்தலில் டெலோ கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.எனினும் தேர்தலில் போட்டியிட்டவர்களை தவிர்த்து பின்கதவால் வந்திருந்த தனக்கு பிடித்தமான பெண்மணியொருவரை சயந்தன் நகரசபை தவிசாளர் ஆக்கியிருந்தார். 

இந்நிலையில் தற்போது டெலோ கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த கனகசபை கஜிதரன் சயந்தனை பொருட்படுத்தாது செயற்படுவது சயந்தனின் எடுபிடிகளிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் சயந்தனால் அழைக்கப்படுகின்ற கூட்டங்களை கனகசபை கஜிதரன் புறக்கணித்து வந்திருந்த நிலையிலேயே தனது எடுபிடிகள் மூலம் கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

கடந்த அரசில் வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசா அண்மையில் சாவகச்சேரி விஜயம் செய்திருந்தார். மாதிரி வீடமைப்பு திட்டமொன்றையும் திறந்து வைத்தார். இந்த சமயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கனகசபை கஜிதரன் என்பவர், சாவகச்சேரி நகரசபையின் கடிதத் தலைப்பில் தனிச்சிங்களத்தில் கடிதமொன்றை சமர்ப்பித்திருந்தார். தனிச்சிங்களத்தில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், சட்டவிரோத பௌத்த விகாரையில் யாத்திரீகர் தங்குமிடம், விடுதியென்பன அமைக்க கோரியிருந்ததாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சஜித் பிறேமதாசவிற்கான கடிதம் சயந்தனிற்கு எவ்வாறு தெரியுமென கேள்வி எழுப்பியுள்ள கனகசபை கஜிதரன் குறித்த நாவற்குழி விகாரை சாவகச்சேரி பிரதேசசபை பிரதேசமென தெரிவித்துள்ளார்.அவ்வாறாக வேறு ஒரு பகுதியில் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் சிபார்சு கடிதம் வழங்கலாமாவென கேள்வி எழுப்பியுள்ளதுடன் அவ்வாறான கடிதத்தை வெளிப்படுத்தினால் தான் பதவியை ராஜினாமா செய்து அரசியலிலிருந்து விலக தயார் எனவும் அறிவித்துள்ளார்.

தனது கிராமத்திலுள்ள யுத்த அழிவிற்குள்ளாகி கைவிடப்பட்ட தங்குமடமொன்றை மீள கட்டி தர கோரி நகரசபை பணியாளர்களை கொண்டே அக்கடிதம் தயாரித்து தரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தீவிர தமிழ் தேசிய செயற்பாட்டளரான கனகசபை கஜிதரன் 2007ம் ஆண்டில் இராணுவ கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்து தலைமறைவாகியிருந்த ஒருவராவார்.

இதனிடையே சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் கடந்த தேர்;தலில் புளொட் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற கிசோர் என்ற நபரே சயந்தனின் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாக சொல்லப்படுகின்றது.அண்மையில் தமிழரசு முக்கியஸ்தர் ஒருவர் சகிதம் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையான நபரான அவர் திட்டமிட்டு பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக சொல்லப்படுகின்றது. 

No comments