விக்கினேஸ்வரன் அணி நாளை அவசரமாகக்கூடுகிறது


வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாளை அவசரமாகக் கூடி ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை யாழ்ப்பாணத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த மாதம் 24ஆம் நாள், தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்குவதாக, விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

இந்தக் கட்சியின் கட்டமைப்புகள் இன்னமும் உருவாக்கப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்று நாளை கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என்றும், அரசியல் கட்சிகளை இணைத்துப் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments