மைத்திரியின் ஊடகப் பணிப்பாளராக சுரேன் ராகவன் நியமிப்பு

சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளரான, கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுக்கு நேற்றுச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  கலாநிதி சுரேன் ராகவனை, ஊடகப் பிரிவு பணியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதேவேளை,ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக இருந்த, சமிந்த சிறிமல்வத்த,  உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்,  பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே, அவரது தனிப்பட்ட அதிகாரியாக சமிந்த சிறிமல்வத்த பணியாற்றியிருந்தார்.

No comments