சபாநாயகர் ஆதரவளிக்கவேண்டும்: மஹிந்த தரப்பு!


ட்சி சார்பின்றி, அரசமைப்புக்கும் சட்டத்துக்கு மதிப்பளித்து நாடாளுமன்றம் கூட்டப்படும் தினத்தில் சபாநாயகர் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்  போது தெரிவித்தார்.
இதன்போது சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கைத் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,ஜனாதிபதி அரசமைப்புக்கு அமையவே தன்னுடை கடமைகளை முன்னெடுக்கின்றார். அதனை யாராவது சவாலுக்கு உட்படுத்துவார்களாயின் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளதைப் போல உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யலாம்
ரணிலை நீக்கியமைத் தொடர்பில் சபாநாயகருக்கு தனிப்பட்ட ரீதியில் கவலையிருக்குமாயின், ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் இல்லையென்றும் அவர் கருத்தினால் உயர் நீதிமன்றத்துக்குச் செல்லலாம்.
ஏனெனில் மேல்நீதிமன்றுக்கு மாத்திரமே அரசமைப்பு தொடர்பில் வரைவிலக்கணத்தைத் தரமுடியும்.
ஏன் இவர்கள் உயர் நீதிமன்றத்துக்கு செல்லவில்லையனெ கேட்கிறேன் என்றார்.
 சபாநாயகரின் அறிக்கை தவறு நாம் அதனை நிராகரிக்கின்றோம் சபாநாயகருக்கு அவ்வாறு செய்வதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
3ஆவது தடவையாகவும் நாம் தெளிவாகக் கூறுகின்றோம். எனவே அவர் எத்தனை அறிக்கைகள் வெளியிட்டாலும் அது செல்லுப்படியாகாது. 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, அங்குள்ள உயரதிகாரிகள் கூறுகின்றனர் வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டே ஆசனங்கள் ஒதுக்கப்படும் என்று.அதனால் சபாநாயகர் எது வேண்டுமானாலும் கூறட்டும் ஆனால் நாட்டின் சட்டதிட்டங்களை அரச அதிகாரிகள் மீறமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

No comments