நாளை மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை!


பிரதமர் மகிந்தவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீது மீண்டும் நாளை வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதி தற்போது இணங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. கட்சித் தலைவர்களை இன்று மாலை அவர் சந்தித்த போது பேச்சுக்களின் முடிவில் இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை மைத்திரி விதித்ததாகவும், அவை தொடர்பில் தற்போது ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஏனைய கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் தரப்பு பெரும்பான்மை கொண்டுள்ளதை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், மகிந்த தரப்பு குழப்பினால் குரல் வாக்கெடுப்புக்கு போவதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் நாடாளுமன்றினை ஒரு போதும் தான் ஒத்தி வைக்க மாட்டேன் என சந்திப்பின் மைத்திரி உறுதி வழங்கியுள்ளதாகவும் கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜக்கிய தேசியக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் இன்றிரவு பாயவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments