சட்டவிரோதமாக நள்ளிரவுடன் நாடாளுமன்றைக் கலைக்க சதி - ஐ.தே.க குற்றச்சாட்டு


சட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி​பால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகிய இருவரும்  இரண்டாவது சட்டவிரோத சதிக்காக தற்போது கூடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாமல் சட்டவிரோதமாக பிரதமரை நியமித்து, அமைச்சரவை ஒன்றை உருவாக்கிய மைத்திரி- மஹிந்த அமைப்பு தற்போது, நாட்டின் அரசமைப்புக்கு முற்றாக மீறும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முயற்சிக்கின்றனர்.


சில வேளைகளில் இன்று இரவு கூட நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.  தவறான அரசியல் முடிவுகளை எடுத்து, அதன்மூலம் நாட்டை அழிக்க முயற்சிப்பதன் ஊடாக 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது தனக்கு ஏற்படவுள்ள அவமானத்தை தவிர்ப்பதற்காக இப்போது 2ஆவது சட்டவிரோத அரசியல் சதித்திட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.


எனவே கட்சி, நிறம்  பேதம் பாராமல் அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

No comments