பருத்தித்துறையில் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளரின் வீட்டின்மீது தாக்குதல்



பருத்தித்துறை சுப்பர்மடத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்திருந்த ஒருங்கிணைப்பாளரது வீட்டின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

கொலை அச்சுறுத்தல்களையும் தாண்டி, மாவீரர்நாளை அனுஷ்டித்த பருத்தித்துறை  சுப்பர்மடம் நினைவேந்தலை முன் நின்று தடத்தியவரது வீடே நேற்று நள்ளிரவில் காடையர் கும்பலால் அடித்துடைக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் பருத்தித்துறையில் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளை மேற்கொண்டவர்களை இராணுவப் புலனாய்வாளர்களும் பொலிஸாரும் இணைந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.

பிற்பகல் வேளை நினைவேந்தல் நடக்கும் இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டதோடு மாவீரர் நாள் நினைவேந்தலைக் குழப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் மீறி மக்கள் ஒன்றுதிரண்டு மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையிலேயே மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்திருந்த ஒருங்கிணைப்பாளரது வீட்டின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

No comments