முல்லையில் வெள்ளப்பெருக்கு: சிரமங்கள் மத்தியில் மீட்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தின் நித்தகை குளம் உடைப்பெடுத்துள்ளதால் அந்த பிரதேசத்தில் அகப்பட்டிருந்த ஆறுபொதுமக்களை  அனர்த்த முகாமைத்து நிலையத்தினர் விமானப்படையினரின்
உலங்கு வானூர்தி உதவியுடன் மீட்டுள்ளனர். வெள்ளத்தினுள் அகப்பட்டிலுந்தவர்களை மீட்க  விமானப்படையினரின் உதவி கோரப்பட்டிருந்த நிலையில் அனுராதபுரத்தில் இருந்தே உலங்கு வானூர்த்தி வரவேண்டும் என பதிலளிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினமான வியாழக்கிழமை நிலவிய காலநிலையால் மீட்பு பணிகளில் இணைய முடியாதிருப்பதாக விமானப்படை முதலில் அறிவித்துள்ளது.அதேவேளை பின்னர் அனர்த்த முகாமைத்து நிலயத்தினை தொடர்புகொண்ட விமானப்படையினர் இன்று காலை வேளை உலங்குவானூர்தி கொண்டு அகப்பட்டிருந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமாரின் கோரிக்கையினையடுத்து மீட்புபணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை வடக்கின் மீள்குடியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்; தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

இன்னிலையில் முப்படையினரும் இணைந்து விமானப்படையிரின் உலங்குவானூர்;தி கொண்டு நித்தகைகுளம் பகுதியில் சிக்குண்ட ஆறு மக்களையும் மீட்டு குமுழமுனை பிரதேசத்தில் கொண்டுவந்து இறக்கி அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் ஒப்படைத்துள்ளார்கள்.

முன்னதாக வெள்ளத்தில் சிக்குண்டவர்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிக்கு தொடர்பு கொண்டு குமுழமுனை பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.சிக்குண்ட ஆறுபேரையம் மீட்பதற்காக பாரிய பிரயத்தனம் மேற்கொண்டபோதும் அவர்களிடத்திற்கு செல்லமுடியாத நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்துள்ளது.

இன்னிலையில் அனர்த்த முகாமைத்து நிலையத்தினர் விமானப்படையினரின் உலங்கு வானூர்தி உதவியினை கோரியுள்ளார்கள் விமானப்படையினர் அனுராதபுரத்தில் இருந்தே உலங்கு வானூர்த்தி வரவேண்டும் என்றும் நேற்றைய (08) காலநிலையால் வரமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்த அதேவேளை அன்று நள்ளிரவு அனர்த்த முகாமைத்து நிலயத்தினை தொடர்புகொண்ட விமானப்படையினர் இன்று காலை வேளை உலங்குவானூர்தி மூலம் மீட்டுள்ளனர்.

No comments