தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் பதவி விலக முடிவு


நாடா­ளு­மன்­றத் தேர்­தலை நடத்­து­வது தொடர்­பில் தொடர்ந்­தும், நெருக்­கு­வா­ரம் கொடுத்­தால் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் மூன்று உறுப்­பி­னர்­க­ளும் பதவி துறப்­ப­தற்கு முடிவு செய்­துள்­ளதாக அறி­ய­மு­டி­கின்­றது.

தமது முடிவை அர­சின் உயர் மட்­டங்­க­ளுக்­கும் அறி­விப்­பது என்று அவர்­கள் நேற்­றுத் தீர்­மா­னித்­துள்­ள­னர்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­ப­டும் அர­சி­தழ் அறி­விப்பு நேற்­று­முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டது. நாடா­ளு­மன்­றத் தேர்­தல் ஜன­வரி 5ஆம் திகதி நடத்­தப்­ப­டும் என்­றும் அர­சி­த­ழில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அரச தலை­வ­ரின் திடீர் அறி­விப்­பை­ய­டுத்து தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் மூன்று உறுப்­பி­னர்­க­ளும், தேர்­தல்­கள் செய­ல­கத்­தில் நேற்று மதி­யம் ஆராய்ந்­த­னர். சுமார் 3 மணி நேரம் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றுள்­ளது.

அரச தலை­வர் அர­ச­மைப்­புக்கு முர­ணா­கவே நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­துள்­ளார் என்று ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர் ஒரு­வர் கலந்­து­ரை­யா­ட­லில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

அர­ச­மைப்­புக்கு முர­ணாக தேர்­தல் நடத்த முடி­யாது என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். உயர் நீதி­மன்­றத்­தில் பல தரப்­பும் வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­ய­வுள்­ள­தா­கக் கூறு­கின்­றன.

உயர் நீதி­மன்­றம் வழங்­கும் தீர்ப்பை கவ­னத்­தில் எடுத்­துச் செயற்­ப­ட­வேண்­டும் என்­பதை ஆணைக்­கு­ழு­வின் மூன்று உறுப்­பி­னர்­க­ளும் ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர்.

இதே­வேளை, ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர்­கள் மூவ­ரை­யும் பதவி நீக்­கம் செய்­வ­தற்­கும் இர­க­சிய நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது தொடர்­பி­லும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

நாடா­ளு­மன்­றத் தேர்­தலை அர­ச­மைப்;புக்கு முர­ணாக நடத்­து­மாறு பணிக்­கப்­பட்­டால் அல்­லது அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டால் பதவி துறப்­பேன் என்று ஆணைக்­குழு உறுப்­பி­னர் ஒரு­வர் தலைவரிடம் தெரி­வித்­துள்­ளார்.

இதன்­போது, யாரா­வது ஒரு­வர் பதவி துறக்­கும் முடிவை எடுத்­தா­லும், மூன்று உறுப்­பி­னர்­க­ளும் பத­வி­யைத் துறப்­பது என்று தீர்­மா­னித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இதனை அரச உயர்­மட்­டத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­த­வும் ஆணைக்­கு­ழு­வி­னர் முடிவு செய்­துள்­ள­னர்.

No comments