கோப்பாய் துயிலுமில்லம் முன் மாவீரர் நாள் பணிகள் தீவிரம்




தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள துயிலுமில்லங்களின் முன்பாக மற்றும் பொது இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.

இதற்கான ஏற்பாடுகளை மாவீர்களின் பெற்றோர்கள்இ உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகள் என்பன மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் யழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாகவும் மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் படையினர் முகாம் அமைத்து நிலை கொண்டுள்ளதால் அதன் முன்பாக உள்ள காணியொன்றில் நினைவு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய காணி துப்பரவு செய்யப்பட்டு அக் பாணியிலும் வீதிகளிலும் மஞ்சள் சிவப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டும் நிகழ்வுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

No comments