கொலையாளிகளிற்கு மைத்திரியின் பரிசு!


முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் வழிநடத்தலில் வெலிக்கடை சிறைக்கைதிகள் படுகொலை அரங்கேற்றிய காவல்துறை அதிகாரிக்கு மீள் பதவி வழங்கப்பட்டுள்ளது.வெலிக்கடை படுகொலை தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஐP.நியோமால் ரங்கஜீவ, மீண்டும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் மீள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான கட்டளையை காவல்துறை அதிபர் பிறப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது காவல்துறையினை முப்படைகளின் கீழ் கொண்டுவந்துள்ள மைத்திரியே இதற்கான நியமன அதிகாரத்தை வழங்கியிருந்ததாக தெரியவருகின்றது. 

ஆட்கடத்தல்கள்,படுகொலைகளை அரங்கேற்ற கோத்தபாயவினால் பயன்படுத்தப்பட்ட குறித்த போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் பின்னராக சிறைக்குள் வைத்து திட்டமிட்ட சிறை கலவரமொன்றை உருவாக்கி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இப்படுகொலைகளை சிறைச்சாலை அத்தியட்சகருடன் இணைந்து  போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அத்தியட்சகரான நியோமால் ரங்கஜீவவும் அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments